Posts

Showing posts from January, 2011

குத்து மதிப்பான குருபெயர்ச்சி பலன்கள்..!

மேஷ ராசி மக்களே! ஏலேய் பய மக்கா, ஃபர்ஸ்ட் ஃப்ளோர்லெருந்ந்து , செகண்ட்ஃப்ளோர்லெருக்கு..குரு பெயர்ச்சி தாவுறதால, நீங்க 2ல இருந்தா 1க்கும், 1ல இருந்தா 0க்கும், 0ல இருந்தா, அதான் கீழ் போர்ஷன்ல இருந்தா பூமிக்கடியில போய் ஒளிஞ்சிக்கோங்க!. சன் டீவில திருமதி. செல்வம் , கலைஞர் டீவில மானாட மயிலாட மாங்கு மாங்குன்னு பார்த்தா, கல்யாணம் ஆகாதவங்களுக்குக்கூட விவாகரத்து நடக்க வாய்ப்பிருக்கு. பரிகாரம்: ராமராஜனையோ, ஜே.கே. ரித்தீஷையோ உங்க காஸ்ட்யூம் டிசைனரா நியமிச்சு, அவங்க சொல்ற கலருல வலம் வருதல் ஷேமம். (மாடு முட்டவரும்னு பயபடுற பயமக்கள், வீட்டுக்குளெ முடங்கி கிடக்குறது நல்லது) ரிஷப ராசி மக்களே! நீங்க அடுத்த ஆறு மாசத்துக்கு நேரா நிமிர்ந்து நடக்கக்கூடாது. 98.3டிகிரி சாய்ஞ்சாப்ல நடக்கறது நல்லது. நடக்கறப்போ முக்கியமா உங்க வலதுகாலும், இடதுகாலும் உரசவே கூடாது. அப்படி நடக்காலேன்னா என்ன ஆகும்னு கேக்கறீகளா, நடக்கக்கூடாததெல்லாம் நடந்துரும். யோகாதிபதியான குரு, பாதகாதிபதியான சனியோட வீட்டுல வலுக்கட்டாயமா தொடர்வதால, உங்க புள்ளைக்கு எந்தக் கல்லூரியில இடம் கிடைக்கலைன்னாலும், டுடொரியல் கல்லூரியிலயாவது இடம் கிடைக